நாக்கை கட்டுப்படுத்துவது எப்படி..?

ஞானகுரு பார்வை

கேள்வி : தற்காப்புக்கலை ஆணுக்குத் தேவையா அல்லது பெண்ணுக்குத் தேவையா..?

  • என்.பரமேஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஞானகுரு :

எந்த உயிரினமும் தன்னுடைய இனத்தைப் பார்த்து அச்சப்படுவதே இல்லை. ஆனால், மனிதன் மட்டுமே பிற மனிதரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தற்காப்புக் கலை கற்றுக்கொள்ளும் அவசியம் இருக்கிறது. தற்காப்புக் கலைகளை விட, மனதையும் புத்திசாலித்தனத்தையும் வலிமைப்படுத்துவதே ஆபத்திலிருந்து தப்பிக்க வைக்கும்.

கேள்வி : வாய், நாக்கு கட்டுப்படுத்த எளிய வழி இருக்கிறதா..?

  • பி.பூமிநாதன், வ.உ.சி. நகர்.

ஞானகுரு :

நீண்ட வருடங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும், 100 ஆண்டுகள் வாழ்வேன் என்று மந்திரம் போன்று அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். ஏனென்றால் உணவு, பேச்சு ஆகிய இரண்டும்தான் மனிதனின் ஆயுளைத் தீர்மானிக்கிறது.

Leave a Comment