ஞானகுரு பார்வை
கேள்வி : மனிதருக்கு பாடம் சொல்லித்தருவது வெற்றியா… தோல்வியா..?
- எம்.பவளக்குமார், சிவகாசி.
ஞானகுரு :
கற்றுக்கொள்ளும் பக்குவம் எதில், எப்படி, எப்போது கிடைக்கிறது என்பதே முக்கியம். வெற்றியில் பாடம் படித்தவர்களும் உண்டு, தோல்வியில் பாடம் படிக்காதவர்களும் உண்டு.
கேள்வி : திருமணம் மகிழ்ச்சியின் தொடர்ச்சியா… பயிற்சியா..?
- ஜி.குணசேகரன், என்.ஜி.ஓ. காலனி.
ஞானகுரு :
மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்தே பலரும் திருமணம் முடித்து ஏமாந்து போகிறார்கள். திருமணம் என்பது கணித வகுப்பு போன்றது. ஃபார்முலாவை புரிந்துகொண்டவர்களுக்கு மட்டுமே சகிப்புத்தன்மையும் அதன் மூலம் சந்தோஷமும் கிடைக்கும்.
