ஞானகுரு பார்வை
கேள்வி : ராமாயணத்தில் ராமன் சகோதரர்கள், ராவணன் சகோதரர்கள் இவர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்..?
- எம்.சுமதி, காந்திநகர்.
ஞானகுரு :
அண்ணனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்க்கையை துறந்தவன் லட்சுமணன். அண்ணனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே இழந்தவன் கும்பகர்ணன். இவர்கள் நல்ல தம்பிகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ராமனும், ராவணனும் நல்ல அண்ணனாக நடந்துகொண்டார்களா..? தங்களுக்கு சேவை செய்வதற்காகவே தம்பிகள் பிறந்திருக்கிறார்கள் என்பது போன்று அவர்கள் வாழ்க்கையில் விளையாடுவது துரோகம் இல்லையா..? இந்த இரண்டு சகோதர வம்சத்தினரிடமும் அன்பு கிடையாது, அரச விளையாட்டு மட்டுமே உள்ளது.
கேள்வி : நம் சமூகம் தாய் மாமனுக்கு இத்தனை மதிப்பளிப்பது ஏன்..?
- டி.சீதாராமன், என்.ஜி.ஓ.காலனி
ஞானகுரு :
எல்லா தாய் மாமனுக்கும் இந்த சமூகம் மதிப்பும், மரியாதையும் தருவதில்லை. வசதியும் வாய்ப்பும் உள்ள தாய் மாமனை மட்டுமே கொண்டாடுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
