மனிதர்கள் ஏன் மரணத்தை மதிப்பதே இல்லை..?

ஞானகுரு பார்வை

எப்படி பிறந்தோம் என்பது பற்றி மனிதகளுக்கு நிறைய குழப்பம் இருக்கிறது. அதேபோன்று, தங்களுக்கு மட்டும் மரணம் இப்போதைக்கு வரப்போவதில்லை என்று நம்புகிறார்கள். அதனால் மரணம் பற்றி யாரும் எந்த கவலையும் அடைவதில்லை.

அதற்குப் பதிலாக பணம், மரியாதை, அந்தஸ்து, அவமானம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு மனிதர்கள் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் தெளிவு கிடைத்தபிறகு, இதற்காகவா இத்தனை போராட்டம் நடத்தினோம் என்று தங்களைத் தாங்களே நொந்துகொள்கிறார்கள்.

அதாவது, தங்களுக்குப் பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்கவில்லை என்றால் ரசிகனாக இருப்பதற்கே அர்த்தமில்லை என்று துடிக்கும் இளைஞர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே இருப்பதில்லை.

வெரைட்டியான சாப்பாடு மட்டுமே வேண்டும் என்று கட்டளையிட்டவர்கள் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு எதையாவது சாப்பிட்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

இப்படி வாழ்க்கையில் எல்லா விருப்பங்களும், வெறுப்புகளும் மாறிக்கொண்டே இருக்கும். எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை பெரும்பாலும் முதுமையிலே புரிந்துகொள்கிறார்கள். அதோடு, வாழ்க்கையில் மாறவே மாறாத ஒன்று மரணமும், ஜனனமும் மட்டுமே என்பதை அப்போதுதான் அறிகிறார்கள்.  இதனை இளவயதில் புரிந்துகொண்டால், இரண்டுக்கும் இடையிலான வாழ்க்கையை டேக் இட் ஈஸி என எடுத்துக்கொண்டு நகரலாம்.  

Leave a Comment