ஓல்டு இஸ் கோல்டு ஜோக்ஸ்

சிரிச்சுக்கிட்டே இருங்க

சமூகவலைதளத்தில் நீண்ட நாட்களாக சுற்றும் ஒரு சில நகைச்சுவை, எப்போது படித்தாலும் மீண்டும் சிரிக்க வைக்கும். அப்படிப்பட்ட இரண்டு லட்டு ஜோக்ஸ்

இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார். ”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.

யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.

அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.

”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.

பலே பலே சர்தார்ஜி

டெல்லியில் இருந்த சர்தார்ஜி தனது பழைய காரை விற்க நினைத்தார். அந்தக் கார் ஏற்கனவே ஒரு லட்சம் மைலுக்கு மேல் ஓடிவிட்டது. அதிக தூரம் ஓடியிருந்தால் யாரும் நல்ல விலைக்கு கேட்கவில்லை.

சென்னை நண்பரிடம் யோசனை கேட்க , அந்த நண்பர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி வைத்தார். சர்தார்ஜியின் கார் மீட்டரை அட்ஜஸ்ட் செய்து வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் மட்டும் ஓடியிருப்பது போல மெகானிக் மாற்றி விட்டார். சில நாட்கள் கழித்து சென்னை நண்பர் சர்தார்ஜியைத் தொடர்பு கொண்டு பேசியபோது

’’ஏன் இன்னும் அந்தக் காரை விற்கவில்லை?’’ என்றார்.

அதற்கு சர்தார்ஜி , ’’அது வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் தானே ஓடியிருக்கிறது. ஏன் விற்கணும்?’ என்று சொன்னாரே பார்க்கணும்.

Leave a Comment