டாக்டரை சாய்ச்சுப்புட்டாங்களே…

ஹிஹி ஜோக்ஸ்

சமூகவலைதளத்தில் நீண்ட நாட்களாக சுற்றும் ஒரு சில நகைச்சுவை, எப்போது படித்தாலும் மீண்டும் சிரிக்க வைக்கும். அப்படிப்பட்ட சில ஜோக்ஸ்

பாய் என்றால் பையன்

டீச்சர் : “உங்க பையன் ஒழுங்காகவே படிக்க மாட்டேங்குறான்”.

அப்பா : “என்ன பண்ணினான் டீச்சர்?”

டீச்சர் : “கஸ்தூரிபாய் பற்றி ஒரு குறிப்பு எழுதுன்ற கேள்விக்கு ”கேள்வியே தப்பு…. கஸ்தூரி பாய் கிடையாது. கேர்ள் அப்படீன்னு எழுதியிருக்கான்….”

வேண்டாம் டாக்டர் வேண்டாம்.

Lady : உள்ளே வரலாமா டாக்டர்?

Dr : வாங்க மேடம்.வந்து உக்காருங்க.என்ன பிரச்னைன்னு சொல்லுங்க.

Lady : என் பையனுக்கு ஒடம்பு சரியில்லை!

Dr: பேர் என்னம்மா?

Lady : மஞ்சுளா!

Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர்வெச்சிருக்கீங்க?

Lady : டாக்டர் அது என் பேரு!

Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!

Lady : குஞ்சு!

Dr: மொத்தமே அதுதான் பேரா?

Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!

Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?

Lady : லூஸ் மோஷன்!

Dr : எப்படிப் போறான்?

lady : அது, கதவத் தொறந்துவெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப்போயிடுவான்!

Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!

Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன். இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!

Dr : கடவுளே…அம்மா, பையன் ஆய்…ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன். புரிஞ்சுதா?

Dr : சரி… சாப்ட்டானா

Lady : இல்ல டாக்டர் நல்லவேளை அதுக்குள்ளே அவன் கைய கழுவி விட்டுட்டேன்!

Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா.  இப்படி என்னை பாடா படுத்தாதீங்க.உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?

Lady : இல்லைங்க.என் வீட்டுகாரர் துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு.

Dr: என்னம்மா இது..பையனுக்கு ரெண்டு வயசுதான் ஆகுது.அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்.எப்படி இது?

lady : ச்சீசீ…அவர் இடைல ரெண்டு நாள் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பிரச்னைக்காக.

Dr : ஓஓஓஓ அப்படியா.! சரி,சொல்லுங்க …

Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்.

Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க? நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்.!

Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்.

Dr : ஓ சாரி…

Lady : அதான் என் பையன சரி பண்ணிடுவீங்களே, அப்புறம் எதுக்கு சாரி?

Dr : ஐயோ ஆண்டவா.! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்.

Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால் தான் குடிச்சான்.

Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?

Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?

அப்போது மயங்கி விழுந்த டாக்டர் எழவே இல்லை.

Leave a Comment