விதியை நம்புபவர்கள் யார்..?

ஞானகுரு தரிசனம்

கேள்வி : மனித வாழ்வில் ஜெயிப்பது விதியா.. மதியா..?

  • ஜி.புஷ்பராஜ், குமாரபாளையம்.

ஞானகுரு :

தன்னுடைய தோல்விக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத நபர்கள் சொல்லும் வார்த்தையே விதி. தோல்விக்கு சரியான காரணம் கண்டறிந்து, அதனை வெல்வது மதி.

…………………….

கேள்வி : கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது ஞானகுருவுக்கு பொருந்துமா..?

  • சி.விசாலாட்சி சந்திரன், படந்தால், சாத்தூர்.

ஞானகுரு :

அவரவருக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக்கொள்வது போதுமானது. மிகவும் ஆழமாக யோசிப்பது, மிகவும் தீவிரமாக காதலிப்பது, மிகவும் அதிகம் கற்பது போன்ற எல்லாமே ஆபத்தையே தரும். வீட்டு வாசலில் பூச்செடி வைப்பதற்காக  விவசாயத்தை முழுமையாக கற்றுக்கொள்ளத் தேவையே இல்லை.

Leave a Comment