ஞானகுரு தரிசனம்
கேள்வி : தாய், தாரம் இருவருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன..?
- டி.மனோகரன், லட்சுமிநகர்.
ஞானகுரு :
மகன் இஷ்டப்படி எல்லாமே நடக்க வேண்டும் என்று தாய் ஆசைப்படுவாள். தன்னுடைய இஷ்டத்துக்கு கணவன் நடக்க வேண்டும் என்று மனைவி ஆசைப்படுவாள். இரண்டு பேருமே அந்த ஆணின் அன்புக்கு ஏங்குவார்கள்.
இந்த இரண்டு பேரில் ஆண் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் மனைவிக்கு மட்டும்தான். ஏனென்றால், அம்மா என்பது கடந்த காலம். மனைவி என்பது நிகழ்காலம். அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நிகழ்காலம் நரகமாகிவிடும்.
……………..
கேள்வி : படிப்பது, கேட்பது இவற்றில் சிறந்தது எது… ஏன்..?
- எம்.மஞ்சுளா, அல்லம்பட்டி.
ஞானகுரு :
வகுப்பறையில் மாணவர்கள் அனைவருமே ஆசிரியர் பாடம் நடத்துவதை அக்கறையுடன் கேட்கிறார்கள் என்றுதான் நினைக்கிறோம். ஆனால், உண்மையில் அப்படித்தான் நடக்கிறதா..? ஆசிரியர் பாடம் புகட்டுவதை சில மாணவர்களால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கவனிக்க முடிவதில்லை, சிலரால் கால் மணி நேரம், சிலரால் அரை மணி நேரம் கவனிக்க முடியும். அவ்வளவுதான் அதற்கு மேலும் பேசுபவரை மாணவர்களால் பின் தொடரவே முடியாது. ஆகவே, கேட்பதை விட படிப்பதே உயர்வானது.
ஒவ்வொரு எழுத்தும் வாசகன் மனதில் உயிர் பெற்று உலவும். அந்த கற்பனையைத் தாண்டி வேறு புதிய கற்பனை எழுவதற்கும், மனம் திசை மாறுவதற்கும் வாசிப்பில் வாய்ப்பு இல்லை.
