கேள்வி : தியானத்தில் என்னால் முழு மனதுடன் ஈடுபட முடியவில்லை. மனம் அலைபாய்கிறது. என்னால் ஆன்மிகத்தில் மேன்மை அடையவே முடியாதா? – எம்.கிருஷ்ணன், திருச்சி
ஞானகுரு :
மனம் என்பது காட்டாற்று வெள்ளம் மாதிரி. அதனை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது. அதேநேரம், அலைபாயும் மனதை திசை மாற்ற முடியும். குடிப்பதற்கு ஆசை வரும் நேரத்தில் உங்கள் அம்மா அல்லது பிள்ளையுடன் போன் செய்து பேசுங்கள். குடிக்கும் ஆசை காணாமல் போய்விடும்.
உண்மையான தியானம் எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஏதேனும் ஒரு விஷயத்தை செய்யும்போது, நேரம் போவதே தெரியாமல் அந்த வேலையை ரசிக்கிறீர்கள் என்றால், அதுவே உண்மையான தியான நேரம். இப்படிப்பட்ட தியானத்துக்கு ஆசைப்படுங்கள். போலி தியானத்தை நம்பி ஏமாற வேண்டாம்.
gyaanaguru.com Changed status to publish August 30, 2024