மாநகராட்சிக்கு செலவு வைக்காத மேயர்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 466

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பதவிக்கு வந்தபிறகு அரசாங்க வீட்டில் தங்காமல், அரசு காரை பயன்படுத்தாமல், தன்னுடைய சொந்தப் பணத்தில் அனைத்து செலவுகளையும் செய்து புதுமை படைத்தார். அவரது வழியில் அவரது அன்புக்குப் பாத்திரமான மேயர் சைதை துரைசாமியும் மாநகராட்சி பணத்தைப் பயன்படுத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டே பதவியில் அமர்ந்தார்.

இந்த விஷயம் மாநகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்களுக்கு மட்டுமே தெரியும். பொதுமக்களுக்கு இந்த விஷயம் போய் சேர்வதற்கு காரணமாக முரசொலிக் கட்டுரை அமைந்தது என்றே சொல்ல வேண்டும். மேயர் சைதை துரைசாமி காலத்தில் உணவுக்கு அதிகம் செலவு செய்யப்பட்டுள்ளது என்ற கட்டுரைக்கு மிகத் தெளிவாக மாமன்றத்தில் பதில் கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி.

இதையடுத்தே முந்தைய மேயர்கள் தங்கள் சொந்த செலவுக்கு எப்படியெல்லாம் மாநகராட்சி ஊழியர்களையும் பணத்தையும் பயன்படுத்தினார்கள் என்பது தெரியவந்தது. அதேநேரத்தில் மேயர் சைதை துரைசாமி  மாநகராட்சிக்கு ஒரு ரூபாய் கூட செலவு வைக்காமல் சொந்த செலவில் பணியாற்றுகிறார் என்பதும் பொதுமக்கள் அனைவருக்கும் தெரியவந்தது.

மேயர் பணியில் இருந்த காலம் முழுக்க தன்னுடைய சொந்த வாகனத்தை மட்டுமே சைதை துரைசாமி பயன்படுத்தினார். பெட்ரோல், டிரைவர் படி என்று எந்த ஒரு செலவுக்கும் மாநகராட்சியிடம் கை நீட்டியதில்லை. எந்த ஒரு மாநகராட்சி ஊழியரையும் தன்னுடைய வீட்டுப் பணிக்குப் பயன்படுத்தவில்லை. வெளியூர், வெளிநாடு செல்வதற்கும் தன்னுடைய சொந்தப் பணத்தையே பயன்படுத்தினார். அதாவது, சென்னை மாநகராட்சிக்கு தன்னுடைய சொந்தப் பணத்தை செலவு செய்யும் நல்ல வாய்ப்பாகவே மேயர் பதவியை சைதை துரைசாமி பயன்படுத்திக் கொண்டார்.

தன்னுடைய சிந்தனை, செயல் முழுவதையும் சென்னை மாநகராட்சிக்கு மட்டுமே ஒப்படைத்து முழுநேரப் பணியாளராக சைதை துரைசாமி பணியாற்றினார்.

அதனாலே மேயர் சைதை துரைசாமியால் 207 திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment