சரியானவராக மாறுங்கள்.
உறவு அல்லது நட்பு வட்டத்தினர் மிகப்பெரும் சோகத்தில் அழும்போது, மனிதர்கள் நான்கு வகையில் நடந்துகொள்கிறார்கள்.
முதல் வகை எம்பதி. அவர்களுடைய துன்பத்தில் நேரடியாகப் பங்கெடுத்து, அவர்களைப் போலவே அழுது புலம்புவது.
அடுத்தது சிம்பதி. வார்த்தை அல்லது செய்கையின் மூலம் உண்மையான ஆறுதல் தருவது
மூன்றாவது அபத்தி. யார் அழுதால் எனக்கென்ன என்று கண்டுகொள்ளாமல் நகர்வது.
நான்காவது சாடிஸம். பிறர் அழுகை, வேதனையைக் கண்டு சிரித்து ரசிக்கும் சுபாவம்.
இதில் சாடிஸம் என்பது அரக்க குணம். எனவே யாரும் இதை செய்யவே கூடாது. அதேபோல் அபத்தி என்ற அலட்சிய மனப்பான்மையும் மோசமான அணுகுமுறை. நாளை இதேபோன்று ஒரு சூழல் நமக்கும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்துடன் நடந்துகொள்வதே நல்லது.
அதற்காக பிறர் துன்பத்தை தங்கள் துன்பமாக ஏற்றுக்கொண்டு அழுது புலம்பும் இளகிய மனமும் ரொம்பவே ஓவர். அடுத்தவர்களின் துன்பத்தை தங்கள் தலையில் சுமப்பது தேவையில்லாத வேலை. இதனால் யாருக்கும் நன்மை கிடைக்காது.
எனவே, சிம்பதி காட்டுவதே சரியான மனநிலை. அதாவது, இந்த கடுமையான சூழலில் நான் துணையாக நிற்கிறேன் என்று மனதார ஆறுதல் கூறுவது அவர்கள் சோகத்தைக் குறைக்கிறது. ஆறுதல் கூறுபவருக்கும் திருப்தி கிடைக்கிறது. இந்த வகை மனிதராக இருங்கள். அதுவே நல்லது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
