வெல்லும் சொற்களை சொல்லுங்கள்

Image

வார்த்தைகளே வரம்

வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள்.

நல்ல சொற்கள் ஆனந்தம் தரும்.

நல்ல சொற்கள் ஆறுதல் தரும்.

நல்ல சொற்கள் வெற்றி தரும்.

நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும்.

நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும்.

அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும், சில வார்த்தைகள் கொலை செய்யவும் தூண்டிவிடும்.

ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள்.

காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த புற்களும் வளர்ந்துவிடும். அப்படித் தான் சின்னச்சின்ன வார்த்தைகள் மனிதர்களின் வாழ்க்கையையும் மனநிலையையும் மாற்றிவிடக் கூடும். பேசிய வார்த்தைகளுக்கு நீங்களே பொறுப்பு.

ஆகவே, நல்லதைப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

Leave a Comment