சின்ன பிரச்னைக்கும் பெரிய கவலை ஏன்..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி ; சின்ன பிரச்னை, கவலை இருந்தாலும் தூக்கம் வருவதற்கு ரொம்பவே சிரமமாக இருக்கிறது. இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்.

  • பாபுராஜ், மரக்காணம்.

ஞானகுரு :

உடல் களைப்பாகவும் மனம் ஓய்வாகவும் இருந்தால் மட்டுமே உறக்கம் சீக்கிரம் வரும். கவலை அல்லது பிரச்னையால் தூக்கமில்லாமல் அவஸ்தைப்படுபவர்களுக்கு லெட்டர் ஸ்லீப் டெக்னிக் கைகொடுக்கும

ஒரு பேப்பர் எடுத்து கவலையைப் பற்றி பத்து நிமிடங்கள் எழுதுங்கள். அந்த கவலை எப்படி உருவானது, இதனால் என்ன பிரச்னைகள், எத்தனை தீர்வுகள் என்று விரிவாக எழுதுங்கள். இவற்றை எல்லாம் பாயின்ட் பாயின்ட் ஆக எழுதுங்கள். தீர்வுகளை மட்டும் மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். இரவு தூங்காமல் விழித்திருப்பதால் ஏதேனும் தீர்வுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்.

நிச்சயம் இல்லை என்பது புரியும். பேப்பரில் எழுதாமலே இது தெரியும் என்றாலும் மூளையில் பதியாது. பேப்பரில் எழுதும்போது தீர்வு இல்லை என்பது உறுதியாகத் தெரியும். பேப்பரை மடித்து வைத்துவிட்டு படுங்கள். கண்டிப்பாக தூக்கம் வரும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்