• Home
  • ஞானகுரு
  • திட்டமிட்டுச் செய்தாலும் சிக்கலில் முடிவது ஏன்..?

திட்டமிட்டுச் செய்தாலும் சிக்கலில் முடிவது ஏன்..?

Image

கேள்வி : சரியான செயல் செய்தாலும் தவறாகவே முடிகிறது. இதற்கு என்ன காரணம்…?

  • சி.மனோஜ், கடலூர்.

ஞானகுரு :

விரலில் பிரச்னை இருப்பதை அறியாதவர், உடலின் எந்த பாகத்தைத் தொட்டாலும் வலிப்பது போலவே உணர்வார். எனவே, பிரச்னையின் மூலாதாரம் எதுவென தெளிவாகக் கண்டறியுங்கள். சேமிப்பு நல்ல செயல். ஆனால், அதை தெளிவாகவும் சரியாகவும் செய்யவில்லை என்றால் சிக்கலாகிவிடும். இதற்கு உதாரணம் எறும்புகள். எதிர்காலத்துக்கு எறும்புகள் தானியங்களை சேமிக்கின்றன. மண்ணில் போடும் எந்த ஒரு தானியமும் முளைத்து செடியாக மாறிவிடும். ஆனால், எறும்புகள் சேமிப்பு தானியமாக மாறுவதில்லை. ஏன் தெரியுமா..? எறும்புகள் தாங்கள் சேமிக்கும் தானியங்களின் முனையை உடைத்துவிடுகின்றன. அதனாலே அந்த தானியங்கள் முளைப்பதில்லை. எனவே, சரியான விடை தேடுங்கள். நிச்சயம் கண்டுபிடிப்பீர்கள்.

கேள்வி : கெளரவத்திற்காக வாழ்வதால்தானே வாழ்வில் தோல்வி கிடைக்கிறது.?

எஸ்.அழகேஸ்வரி, கருப்பசாமி நகர்.

ஞானகுரு ;

கெளரவம், மானம், அவமானம் போன்ற எல்லாமே வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை. இதை எல்லா மனிதர்களும் மிகவும் தாமதமாகவே புரிந்துகொள்கிறார்கள். அப்படி புரிந்துகொள்ளும் நேரத்தில் வாழ்க்கை மிச்சமிருப்பதில்லை. மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் என்று சொல்வதெல்லாம் மனிதர்கள் வாழ்க்கைக்குத் தேவை இல்லை.  வெட்கம், மானம், சூடு, சுரணை போன்றவைகளுக்காக வாழ்க்கையை இழந்தவர்களே அதிகம். மானத்துக்காக கொலை செய்தவர்கள் வாழ்நாள் முழுக்க வருந்திக்கொண்டே இருக்க வேண்டும்.

கேள்வி : முடிவெடுக்க முடியாதபோது என்ன செய்ய வேண்டும்..?

  • பி.ராஜலட்சுமி, என்.ஜி.ஓ.காலனி

ஞானகுரு :

பொறுமையாக இருங்கள். முடிவு தன்னைத்தானே தேடிக்கொள்ளும்.

கேள்வி : வாழ்வில் விரைந்து உயர என்ன செய்யலாம்..?

  • எஸ்.கோமதி, ஆமத்தூர்.

ஞானகுரு :

குறுக்கு வழிகள் நேர் வழிகளைவிட எப்போதுமே ஆபத்தானவை. எனவே, பயிற்சியும் முயற்சியும் தவிர வேறு வழிகள் எதுவுமில்லை. 

Leave a Comment