• Home
  • யாக்கை
  • செல்போன் பார்க்க ஏன் பிடிக்கிறது..?

செல்போன் பார்க்க ஏன் பிடிக்கிறது..?

Image

ஹேப்பி தரும் டோபமைன்

ஒருவர் மகிழ்ச்சி, திருப்தி, உற்சாகம் ஆகியவைகளுடன் இயங்குகிறார் என்றால், அவருக்கு மூளையில் டோபமைன் சுரப்பு போதிய அளவுக்கு இருக்கிறது என்ற அர்த்தம். எந்த ஒரு வேலையையும் ஆர்வத்துடன் செய்பவர்களுக்கு டோபமைன் நிறைய சுரப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இசை, சினிமா, கிரிக்கெட் போன்ற ஏதேனும் ஒன்றில் அதிக ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கு டோபமைன் சுரப்புக்கு பஞ்சம் இருப்பதில்லை.

சுவையான, சத்துள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது, உறவில் உச்சத்தை அடையும் பொழுது, எதிலாவது வெற்றி கிடைக்கும் நேரத்தில் இயல்பாக டோபமைன் சுரக்கிறது. அதனால் தான் அந்த நேரங்களில் எல்லாம் மனிதன் அதிகம் மகிழ்ச்சியுடனும், நேர்மறையான சிந்தனையுடனும் இருக்கிறான்.

பிடிக்காத வேலையைச் செய்பவர்களுக்கு டோபமைன் சுரப்பு குறைகிறது. இதனால் சாப்பாடு போதும் என்ற எண்ணம் தோன்றாமல் நிறைய சாப்பிடுவார்கள். உடல் பருமன், மனதில் வெறுமை போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம். அதேநேரம் டோபமைன் தேவைக்கு அதிகம் சுரப்பதும் ஆபத்து. குறிப்பிட்ட ஒன்றைத் தவிர வேறு எதையும் செய்யத் தோணாது. குடிப்பது, செல்போன் விளையாட்டுக்கு அடிமையாவதற்குக் காரணம் டோபமைன் அளவுக்கு அதிகமாக சுரப்பது தான்.

Leave a Comment