அற்புதமான ஆறு கட்டளைகள்..!
வாழ்க்கையை சந்தோஷமா என்ஜாய் செய்யணும், ஆனா அதுக்கு சிரமம் இல்லாத வழி இருந்தா சொல்லுங்கன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. கஷ்டபடாம சந்தோஷமா இருப்பதற்கான ஆறு வழிகளைத் தான் இப்போ பார்க்கப் போறோம்.
- நேற்று வரை செய்த தவறுகள், வாழ்க்கை முறை, நழுவவிட்ட வாய்ப்புகளை ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டு, இன்று புதிதாகப் பிறந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள்.
- உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள், என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் சிந்திப்பதை முழுமையாக நிறுத்துங்கள்.
- பிறரைப் போன்று வாழ்வதற்கு ஆசைப்படாதீங்கள். அவர்கள் எத்தனை சிரமப்பட்டு அந்த இடத்தை அடைந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.
- உங்களுக்குத் தெரியாத விஷயங்களை தெரியாது என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுங்கள். தெரிந்தது போன்று காட்டிக்கொள்வதில் பெருமை எதுவும் கிடையாது.
- உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள், உங்களால் முடியாத விஷயங்களை செய்ய முடியாது என்று உறுதியுடன் சொல்லிப் பழகுங்கள்.
- இந்த உலகத்தில் உங்களை விட மோசமான வாழ்க்கை, மோசமான நோய், மோசமான சூழலில் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களைவிட நீங்கள் மகிழ்ச்சியான நபர் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
ஒருவர் சந்தோஷமாக இருக்க விரும்பினால் அதற்கு அவர் மட்டுமே போதும் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
