சாதனை மேல் சாதனைகள்
கிரிக்கெட் உலகில் எப்போதாவது ஒரு முறை அற்புதம் நிகழும். அப்படியொரு அற்புதனாக வந்து சேர்ந்திருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. விஜய் ஹசாரே டிராபி தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி வெறும் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 15 சிக்சர்கள் விளாசி 190 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்திருக்கிறார்.
முளைச்சு மூணு இலை விடவில்லை என்பது போல் 2011ம் ஆண்டு பிறந்த வைபவுக்கு இப்போது 14 வயதுதான் முடிந்திருக்கிறது. 15 வயதிலே ஏகப்பட்ட சாதனைகளை முறியடித்திருக்கிறார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்து உலக சாதனை, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்களை கடந்து சாதனை படைத்திருக்கிறார்.
இப்போது நடந்து வரும் விஜய் ஹசாரே டிராபியில் அருணாசலப் பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்கு களம் கண்ட வைபவ் சூர்யவன்ஷி 84 பந்துகளில் 16 ஃபோர்கள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 190 ரன்கள் குவித்து அவுட் ஆனான்! இந்த போட்டியில் சதம் அடித்த போது அவனுடைய வயது 14 ஆண்டுகள், 272 நாட்கள்!
இந்த இளம் வயதில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான். இதற்கு முன்பு 1986 ஆம் ஆண்டு ரெயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷாகீர் எலாஹி என்ற வீரர் தன் 15 ஆண்டுகள் 209 நாட்களில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த 39 ஆண்டு கால சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி
அதேபோல் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 150+ ரன்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்திருக்கிறான் வைபவ் சூர்யவன்ஷி. அதாவது 59 பந்துகளில் 150 ரன்களை கடந்திருக்கிறான். இந்த வகையில் இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் 64 பந்துகளில் 150 ரன்களை கடந்ததே சாதனையாக இதுவரை இருந்தது! அதையும் முறியடித்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறான் வைபவ் சூர்யவன்ஷி
அதேபோல் ஐபிஎல்லில் சதம், யூத் டெஸ்ட் போட்டியில் சதம், யூத் ஒருநாள் போட்டியில் சதம், இந்திய ஏ அணிக்காக சதம்,இந்திய U19 ஆசிய கோப்பையில் சதம், சையத் முஷ்டாக் அலி டிராபியில் சதம், விஜய் ஹசாரே போட்டியிலும் சதம் என 14 வயதில் எல்லா சாதனைகளையும் பண்ணி கொண்டு வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
கமான் வைபவ்
