மலையாளத் திரையுலகில் பரபரப்பான நடிகராக இருக்கும் டொவினோ தாமஸ் உடலையும் ஃபிட் ஆக வைத்திருக்கிறார். அதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் டயட்டை தெரிவித்திருக்கிறார். அதன்படி, காலை எழுந்ததும் இரண்டு டம்ளர் வெந்நீர் குடிக்கிறார். காலை உணவாக, தானியங்கள், ஓட்ஸ் போன்றவை எடுக்கிறார்.
மதிய சாப்பாட்டுக்கு முன்பு வேக வைத்த முட்டைகள் மற்றும் பழத்துண்டுகள் சாப்பிடுகிறார். மதிய உணவில், கிரில் செய்யப்பட்ட சிக்கன், மீன் சாப்பிடுகிறார். காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறியில் செய்யப்பட்ட சாலட் வகைகள் அவருக்கு ரொம்பவே பிடித்தமானதாம். இரவு நேரத்தில் பிரட், சப்பாத்தி, நான் என வெரைட்டியாக ஏதேனும் எடுத்துக்கொள்கிறார். எதுவாக இருந்தாலும் இரவு 9 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்துக்கொள்கிறார்.
இரவு சூட்டிங் இருக்கிறது என்றால் பால், பழம் சாப்பிடுகிறார். எப்படி என்றாலும் 6 மணி நேரம் தூக்கம் அவசியம் என்பதில் உறுதியாக இருக்கிறார். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். முன்பு மாடலாக இருந்த நேரத்தில் அதிக நேரம் உடற்பயிற்சிக் கூடத்திலேயே பொழுதைக் கழித்தவர். அதனால் இவரால் ஒரே மாதத்தில் ஐந்து கிலோ எடையை அதிகரிக்கவும் குறைக்கவும் முடிகிறதாம்.