ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது மட்டுமல்ல, சாப்பிடும் உணவை ஜீரணிக்க நமது உடல் உள் உறுப்புகளுக்கு எத்தனை நேரமாகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப சாப்பிடுவது நல்லது.
பழச்சாறுகள் 15 முதல் 20 நிமிடங்களில் ஜீரணமாகிறது. காய்கறி சூப், தர்பூசணி போன்றவை ஜீரணமாக 20 முதல் 30 நிமிடங்கள் ஆகிறது. ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் ஜீரணமாவதற்கு சுமார் 40 நிமிடங்கள் ஆகும்.
காலிஃப்ளவர், சோளம், கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் ஜீரணமாவதற்கு சுமார் 50 நிமிடங்கள் ஆகிறது. கோதுமை, அரிசி, ஓட்ஸ், சிறு தானியங்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்தே ஜீரணமாகும். சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டிக்கு 2 மணி நேரம் ஆகும்.
மீன் சாப்பிட்டால் அரை மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். ஆனால், ஒரு முட்டை ஜீரணமாக 45 நிமிடங்கள் ஆகும். கோழி, வான்கோழி, காடை போன்ற பறவை இனங்களின் இறைச்சி ஜீரணமாக இரண்டரை மணி நேரமும் ஆடு, மாடு இறைச்சிகள் ஜீரணமாக 3 முதல் 4 மணி நேரமும் ஆகிறது. ஆகவே, இந்த நேரத்திற்குப் பிறகு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.