தூக்கம் வரவழைக்கும் மிலிட்டரி டெக்னிக்

ஒலிம்பிக் பயிற்சியாளர் பட் வின்டர் (Bud Winter) உருவாக்கிய மிலிட்டரி ஸ்லீப் டெக்னிக் அதிக சத்தம் மற்றும் மன அழுத்தத்திற்கு இடையிலும் விமானிகளை உடனடியாகத் தூங்க வைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

முதலில் கண்களை மூடி தொடர்ந்து ஆழமாக மூச்சு விடுங்கள். நெற்றி, கண்கள் மற்றும் நாக்கு எனத் தொடங்கி உங்கள் முகத்தசைகளை முழுமையாகத் தளர்த்துங்கள். படுக்கையோடு ஒன்றிணைந்து, தோள்பட்டைகளைத் தளர்த்தி, கைகள் முதல் கால் வரை ஒவ்வொரு தசையாக அமைதிப்படுத்துங்கள்.

மனதை முழுமையாக வெற்றிடமாக்குங்கள். இருட்டறையில் உள்ள வெல்வெட் ஊஞ்சல் போன்று ஏதேனும் ஒரு அமைதியான காட்சியை மட்டும் கற்பனை செய்யுங்கள். எண்ணங்கள் சிதறினால் மீண்டும் கவனத்தை அந்தக் காட்சிக்குக் கொண்டு வாருங்கள். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் ஐந்து நிமிடங்களுக்குள் தூக்கம் வந்துவிடும்.

Leave a Comment