கண்ணீர் விலை மதிப்பற்றது, வீணாக்காதீர்கள்.

மந்திரச்சொல்

இந்த உலகிலேயே விலை மதிப்புள்ள திரவம் கண்ணீர். ஏனென்றால் அதில் 1% தண்ணீரும் 99% உணர்ச்சிகளும் நிரம்பியுள்ளன. எனவே, அதை பிறருக்காக வீணடிக்காதீர்கள்.

உங்களை விட்டுச்சென்ற மனிதர்களை நினைத்து அழுதுகொண்டே இருக்காதீர்கள். அழுகையால் யாரும் திரும்பவருவதில்லை. அமைதியாக மாறுங்கள். தேவையில்லாத ஞாபகங்கள் தானாகவே அழிந்துவிடும். காலம் மகத்தான மருத்துவர்.

சாய்ந்து கொள்வதற்கு தோள்கள் இல்லை என்று அழாதீர்கள், தலையணைகள் கொடுக்கும் நிம்மதியை யாராலும் பறிக்க முடியாது. உங்களுக்கு நீங்களே வாழ்நாள் நிம்மதி.

யாரும் மதிக்கவில்லை என்று மனம் உடைந்து அழாதீர்கள். கண்ணாடியைப் பாருங்கள். அது, நீங்கள் விரும்பும் வகையில் மதிக்கும். உங்கள் நிலையைப் பற்றி  எவருக்கும் எதையும் சொல்லி சிரிக்காது

வலிகளை தாங்க முடியவில்லை என்று அழாதீர்கள். எந்த வலியும் நிரந்தரமில்லை என்று நம்புங்கள். நம்பிக்கை உங்களை தளரவிடாது.

சின்னச்சின்ன விஷயங்களுக்கு அழுவதை விட, சின்னச்சின்ன விஷயங்களையும் ரசிக்கப் பழகுங்கள். அழுவதை விட ரசனை உயர்வானது.  

அழுவது என்றால், அது ஆனந்தக் கண்ணீராக மட்டும் இருக்கட்டும்.

Leave a Comment