தமிழ்லீடர் 2025 சிறந்த எதிர்நாயகன் விருது

சவுபின் சாஹிர் (கூலி)

ரஜினி, கமல், அஜித், தனுஷ் படங்கள் வந்தாலும் சிறந்த வில்லன் என்பதற்கும் சரியான போட்டி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இட்லி கடை படத்தில் அருண் விஜய் வில்லனாக சிறப்பாக நடித்திருந்தார் என்றாலும், அவரது கேரக்டர் எந்த வகையிலும் ஒட்டாத ஒன்றாகவே அமைந்துவிட்டது.

தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டில் மலையாள கரையில் இருந்து வில்லனாக இறக்குமதி செய்யப்பட்டவர் சவுபின் சாஹிர். கூலி படத்தில் முக்கிய வில்லன் நகார்ஜுனாதான் என்றாலும், அவரை ஓவர்டேக் செய்து ரசிகர்களின் மனதில் பச்சென்று ஒட்டிக்கொள்கிறார் சவுபின்.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் மென்மையான வேடத்தால் மனம் கவர்ந்த இந்த சேட்டன், ‘கூலி’யில் கொடுரமாக நடித்து ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்தார்.   சத்யராஜ், ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா என்று பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்தாலும் ரஜினிக்கு அடுத்ததாக சவுபின்தான் ரசிகர்கள் மனதில் நின்றார். அவர்தான் இந்த ஆண்டின் சிறந்த வில்லன்.

நல்லா இருங்க சேட்டன்.

Leave a Comment