தூக்கம் வராமல் அவஸ்தைப்படுபவர்களுக்கு 3, 2, 1 என்ற சிம்பிள் டெக்னிக் போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதாவது தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பாட்டை முடித்துவிட வேண்டும். தாமதமாகச் சாப்பிடுவது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மோசமாக பாதிக்கும். அதேநேரம், வயிறு முட்ட சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பதும் வேண்டாம். முக்கால் வயிறு உணவு போதும். படுக்கைக்கு முன்பு மது, காபி அல்லது டீ குடிப்பதும் வேண்டாம்.
படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பதட்டமான வேலைகளை தவிர்க்க வேண்டும். அலுவலகம் அல்லது வீடு தொடர்பான சிக்கலான பிரச்னைகள் இருந்தால் அவற்றை எல்லாம் இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள் அல்லது நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடுங்கள். ஏனென்றால் டென்ஷனை உருவாக்கும் கார்டிசோலின் தூக்கத்தைக் கெடுத்துவிடும்.
படுக்கைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு செல்போன், தொலைக்காட்சி போன்ற ஒளியில் இருந்து விடுபடுங்கள். திரைகளில் இருந்து வரும் நீல ஒளியானது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோனை அடக்குகிறது. புத்தகம் படிப்பது, இசை கேட்பது, ஜாலியாகப் பேசுவது போன்ற செயலில் ஈடுபட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். தூக்கம் அள்ளிக்கொள்ளும்.