ஆச்சர்யமான சைக்காலஜி உண்மைகள்
மனிதர்கள் ஒவ்வொரு நபரும் தனித்தன்மை மிக்கவர்கள் என்றாலும், எல்லோருக்கும் பொதுவான சில உளவியல் உண்மைகள் இருக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்துகொண்டால் நீங்களும் ஒரு சிலர் நடவடிக்கையைப் புரிந்துகொள்ள முடியும்.
- பசி அல்லது வேதனையில் இருப்பவர் சிரித்தபடி பேசினாலும் உண்மையான அன்பு கொண்டவர், அது போலி சிரிப்பு என்று கண்டுபிடித்துவிடுவார்.
- உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள் 3 நாட்களுக்கு மேல் கோபமாக இருப்பதில்லை. ஏதேனும் ஒரு காரணம் சொல்லி சமாதானமாகிவிடுவார்கள்.
- குளிக்கும் போதும், தனிமையிலும் பாட்டுப் பாடுபவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் வருவதில்லை.
- தனக்கு செலவழிப்பதை விட குடும்பத்தினருக்கு செலவு செய்வதில் ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். தனக்காக ஆண் செலவு செய்வதில் பெண் மகிழ்ச்சி அடைகிறாள்
- பேனா எழுதுகிறதா என்று பரிசோதனை செய்பவர்கள் பெரும்பாலும் தங்கள் பெயரையே எழுதுகிறார்கள்.
- தான் ஒரு அழகி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பெண்ணும் தன் உடல் அமைப்பில் குறை இருப்பதாகவே நினைக்கிறாள்.
- தன்னை பெரிதாக மதிக்காத ஆணையே பெண் காதலிக்க விரும்புகிறாள்.
- கல்லூரி காலத்தை விட பள்ளியில் தோன்றிய நட்பே நீண்ட காலம் நிலைக்கிறது.
- சந்தோஷமாக வாழ்வதற்கும் பணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஏழைகளே எளிதில் புரிந்துகொள்கிறார்கள்.
இவர் இப்படித்தான் இருப்பார் என்று யாரையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. சொல்லப்போனால் நாமே ஒரு சில சூழலில் எப்படி நடந்துகொள்வோம் என்று நமக்கும் தெரியாது. ஆகவே, மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழுங்கள்.
