ஸ்டாலின் அறிவிப்பு எப்போது.
தி.மு.க.வுக்கும் தலைமைச் செயலகத்திற்கும் ஏகப்பட்ட சிக்கல் இருக்கும் நிலையில், ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு மாற்றுவதற்கு ஆலோசனை நடப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
தனியார் கட்டுப்பாட்டில். 160 ஏக்கர் கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸில் சுமார் 8,000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு பிரமாண்டமான கோல்ப் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. மேலும், டென்னிஸ், பேட்மிண்டன் கோர்ட், ஸ்நூக்கர் ஸ்கொயர், நீச்சல் குளம், ஜிம் என பல்வேறு விளையாட்டுகளுக்காக பிரத்யேக இடங்கள் உள்ளன. இது மட்டுமின்றி பார்ட்டி ஹாலும், திருமண மண்டபமும், மதுபானக் கூடமும் செயல்படுகின்றன.
இங்கு வார இறுதி நாட்களில், கொல்கத்தா, பெங்களூரு, மைசூர், புனே, ஹைதராபாத் என பல்வேறு பகுதிகளின் குதிரைப் பந்தயப் போட்டிகள் நடைபெறுவதை இங்கிருந்து பந்தயம் கட்டி நேரடி ஒளிபரப்புவதை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக அமர்ந்து பார்க்க முடியும்.
கடந்த 1946-ம் ஆண்டு கிளப் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பின்னர் 1970-ல் வாடகையும் வசூல் செய்யும்படி குத்தகையில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் நாடியது. 2023 மார்ச் அன்று வழங்கிய தீர்ப்பில் கிண்டி ரேஸ் கோர்ஸ் வழங்க
வேண்டிய வரி மற்றும் வாடகை தொகை முழுமையாக வழங்க வேண்டும் என்றும், பணக்கார விளையாட்டுக்காக மக்கள் வரி பணத்தை இழக்க முடியாது என்றும் உத்தரவிட்டு நிலத்தை மீட்கவும் ஆணையிட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கிண்டி ரேஸ் கோர்ஸ் நிறுவனம் இன்னும் தடை ஆணை பெறவில்லை.
இந்தநிலையில், ரேஸ் கோர்ஸ்க்கு வழங்கிய குத்தகையை ரத்து செய்வதாக அரசு கடந்த 6-ம் தேதி ஆணை பிறப்பித்தது. அதில் சென்னை நகரம் வெகுவாக வளர்ந்துவிட்டதால், சில பேர் மட்டுமே பயனடைந்து வரும் விலை மதிப்பில்லா பசுமையான இடத்தை பொதுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடிவெடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 730 கோடி ரூபாய் செலுத்த வழங்கிய கால அவகாசம் முடிந்த நிலையில் சென்னை ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள் ரேஸ் கோர்ஸுக்கு நேற்று சீல் வைத்து, மைதானம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் வருவதாக நோட்டீஸ் ஒட்டினர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தை இங்கு மாற்றிவிடலாம். மிகவும் விசாலமானதாக,நகரின் நடுவில்,அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் அமைத்து விடலாம்!அமைச்சர்கள் வீடு, காவல் துறை தலமையகம்,முக்கிய தலைமை அதிகாரிகள் வீடு அனைத்தும் வரும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தலைமைச் செயலகத்தை இப்போது கட்டுவதற்குத் தொடங்கினாலும் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு தேர்தல் வந்துவிடும் என்பதால், அடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வேலையைத் தொடங்கலாம் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.