Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : இந்த நிமிடத்தில் வாழு என்கிறார்கள். அப்படி வாழ்வது எப்படி? – யு.மீனா, விருதுநகர்.

312 viewsSeptember 23, 2024
0
gyaanaguru.com September 23, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 23, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 23, 2024 0 Comments

ஞானகுரு :

ஒரு நதியில் இரண்டு முறை கால் நனைக்க முடியாது என்பார்கள். இரண்டாவது முறை கால் நனைக்கும்போது, முதல் முறை உன்னை நனைத்த நீர் காணாமல் போயிருக்கும். இதுதான் இந்த நிமிடத்தில் வாழ விரும்புபவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய தத்துவம்.

கடந்த காலத் தவறுகளுக்கு வருத்தப்படாமல் எதிர்கால கனவில் மிதக்காமல் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக யாருடனும் எதனுடனும் ஒப்பிடாமல் உங்களுக்கு என்ன இருக்கிறதோ அதனை அப்படியே எதிர்கொள்வது தான் இந்த நிமிடத்தில் வாழ்வதற்கான முதல் படி. உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது, சுற்றுலா போகும்போது, ஒரு சினிமா செல்லும் போது உங்கள்  பழைய அனுபவங்களை, நிறைய எதிர்பார்ப்புகளை நெஞ்சில் ஏந்திச் சென்றால் பெரும்பாலும் ஏமாற்றமே கிடைக்கும். எனவே, தினமும் புதிதாய் பிறப்பது போல் எழுந்துகொள்ளுங்கள். எல்லாமே புதிதாகத் தெரிவார்கள். வாழ்க்கை கொஞ்ச நாள் மட்டுமே, மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விட வேண்டாம் என்று மட்டும் எண்ணிக்கொள்ளுங்கள். அது போதும், நிகழ்காலத்தில் வாழத் தொடங்கிவிடலாம்.

gyaanaguru.com Changed status to publish September 23, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US