Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : எனக்கு மட்டும் தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி கிடைத்துக்கொண்டே இருக்கிறதே… அது ஏன்..? – சி.ஜோசப், மார்த்தாண்டம்.

277 viewsSeptember 6, 2024
0
gyaanaguru.com September 6, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 6, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 6, 2024 0 Comments

ஞானகுரு :

எல்லா தடைகளையும் தோல்வியாகப் பார்க்கத் தேவையில்லை. வாகன லைசென்ஸ் வாங்குவதற்கு வந்தவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, வாகனங்களில் பிரேக் எதற்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டார்கள். இதற்கு சரியாகப் பதில் சொல்லிவிட்டால் வண்டி ஓட்டிக் காட்டாமலே லைசென்ஸ் தருகிறோம் என்று சொல்லப்பட்டது. உடனே ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள். விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு, வேகத்தைக் குறைப்பதற்கு, ஒரே ஸ்பீடில் செல்வதற்கு என்றெல்லாம் ஆளுக்கொரு பதில் சொன்னார்கள்.

அவர்களில் ஒருவர் மட்டும் வேகமாகப் போவதற்காக பிரேக் வைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார். உடனே அத்தனை பேரும் சிரித்துவிட்டார்கள். ஆனால், செக்கிங் இன்ஸ்பெக்டர் அவருக்கு மட்டுமே லைசென்ஸ் என்று சொன்னார். அத்தனை பேரும் அதிர்ந்து போனார்கள்.

காரணம் என்ன தெரியுமா..? பிரேக் இருந்தால் மட்டுமே ஒருவரால் தைரியமாக வேகமாகச் செல்ல முடியும். அதனாலே பிரேக் வைக்கப்பட்டிருக்கிறது. இது தான் சரியான சிந்தனை. நீங்களும் உங்கள் தோல்விக்கான உண்மையான பதிலைக் கண்டுபிடியுங்கள். தவறான பதில் சொல்லிக்கொண்டே இருந்தால் வெற்றி கிடைக்காது. ஆழ்ந்து யோசியுங்கள், உங்கள் தோல்விக்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அடுத்து வெற்றி கிடைத்துவிடும்.

gyaanaguru.com Changed status to publish September 6, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US