Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : என் மாமியார் எதற்கு எடுத்தாலும் குற்றம் சொல்கிறார், சண்டை போடுகிறார். ஏன் எல்லா மாமியார்களும் இப்படி இருக்கிறார்கள்..? – பி.மாரீஸ்வரி, சென்னை.

304 viewsAugust 6, 2024
0
gyaanaguru.com August 6, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 6, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 6, 2024 0 Comments

ஞானகுரு :

ஒரு மிகப்பெரும் யானையை அடக்கிவிட முடிகிறது. புலியை நெருப்பு வளையத்திற்குள் பாயச் செய்ய முடிகிறது. நீர் யானையின் வாய்க்குள் தலையை விட்டு எடுக்கிறார்கள். இவை எல்லாம் சாத்தியம் எனும் போது, ஒரு பெண்ணை உங்களுக்கு இணக்கமாக நடக்க வைக்க முடியாது என்று நினைக்கிறீர்களா..?

திருமணம் முடிக்கும் அத்தனை மணப் பெண்ணுக்கும் தனிக்குடித்தன ஆசை இருக்கிறது. அதனால் கணவனை கைக்குள் போட்டுக்கொண்டு மாமியாரை விரட்டிவிட ஆசைப்படுகிறார்கள். இது வெற்றிக்கான வழி இல்லை என்பதால் தோல்வி அடைந்து காயப்படுகிறார்கள். முதலில் மாமியாரை வசப்படுத்த வேண்டும். ஒரு மகள் போன்று சரண் அடைந்துவிடுங்கள்.

அவரது மகனை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும். அந்த  காலம் வரும்வரை காத்திருங்கள்.  தாய்ப்பசுவை வென்றுவிட்டால், கன்றுக்குட்டி தலையை ஆட்டிக்கொண்டு தானே வந்துவிடும். அதற்காக தனிக்குடித்தன சந்தோஷத்தை அனுபவிக்கவே முடியாதா என்ற ஆதங்கம் வேண்டாம். தனிக்குடித்தனம் என்பது ஒரு மரத்தில் பழம் பழுப்பது போன்று தானாகவே நிகழும்… அதுவரை காத்திருக்க வேண்டும். அப்போது தான் அது இனிக்கும்.

gyaanaguru.com Changed status to publish August 6, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US