ஞானகுரு :
இந்த விவகாரத்தில் அல்ஜீரியாவின் இமானே கெலீஃப் பல ஆண்டுகளாகவே பெண்களுக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார் என்பதையும், அனைத்து மருத்துவ விதிமுறைகளும் மிகச்சரியாகவே பின்பற்றியதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு செய்திருக்கிறது. ஆனால், சர்வதேச பிரபலங்கள் இந்த விவகாரத்தை சர்ச்சையாக்கி வருகிறார்கள்.
மருத்துவரீதியாக பெண் என்றால் XX மரபணுக்களும் ஆண்களுக்கு XY மரபணுக்களும் இருக்கும். அரிதாக, ஒருசில பெண்களுக்கு XY மரபணுக்கள் இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு மட்டுமே சுரக்கும் டெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பதில்லை. அதனால் அவர்களுக்கு பெண் உறுப்புகள் வளரும், அவர்கள் தங்களை பெண்ணாகவே உணர்வார்கள். அதனாலே அல்ஜீரியாவின் கெலீஃப் பெண் என்பதற்கான அத்தனை தகுதிகளுடன் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
மரபணு மாறியிருப்பதற்கு இமானே கெலீஃப் குற்றவாளி அல்ல. அதேநேரம், இப்படி சர்ச்சைக்கு உள்ளான ஒருவர் பெண்ணுக்குரிய போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது என்றால், இப்படிப்பட்ட இனத்தவருக்கு தனி ஒலிம்பிக் போட்டியே நடக்க வேண்டும். அது வரையிலும் இவர்கள் பெண்களுடன் மோதட்டும்.