ரசிக்கலாம், சிந்திக்கலாம்.
ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே தேவை. அதாவது, ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு சமூகத்தின் பங்களிப்பு அவசியம்.
அறிவு ஒரு பாபாப் மரம் போன்றது; ஒரே ஒருவரால் அதைத் தழுவ முடியாது. அதாவது, அறிவு மிகப் பெரியது; யாரும் அனைத்தையும் அறிந்தவர் அல்ல.
சூரியன் உதிக்கும் போது யார் பெரியவர், யார் சிறியவர் என்று கேட்பதில்லை. இயற்கை அனைவரையும் சமமாக நடத்துகிறது.
நேற்று என்பது வரலாறு; நாளை என்பது மர்மம்; இன்று ஒரு பரிசு. எனவே, இன்றைய நாளை மதித்து வாழ வேண்டியதே அர்த்தமுள்ளது.
சிறிய கல் கூட பெரிய பாதையில் தடையாக இருக்கலாம். அதனால் சிறிய விஷயங்களையும் அலட்சியப்படுத்தக் கூடாது.
நீண்ட பயணம் ஒரு சிறிய அடியில்தான் தொடங்குகிறது. பெரிய சாதனைகளும் சிறிய முயற்சியில்தான் தொடங்குகின்றன.
மரத்தை வெட்டுவதற்கு முன் அதன் நிழலை நினைத்துப் பாருங்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், உடனடி லாபத்திற்காக எதிர்கால நன்மையை அழிக்கக்கூடாது.
நதிக்கு அவசரம் இல்லை; ஆனாலும் அது கடலை அடைகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், பொறுமையுடன் தொடர்ந்து முயன்றால் இலக்கை அடையலாம்.
அதேபோல் இன்னும் சில சுவாரஸ்ய பொன்மொழிகள்
- அம்மணமாக ஓடும் போது உறுப்பை மறைப்பான் கோமாளி, முகத்தை மறைப்பான் அறிவாளி
- உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த விரும்பினால், ஒருவருக்குப் பணம் கடன் கொடுங்கள்.
- பயந்தவனை இலை விழுந்து கொன்று விடும்.
- குதிரையின் குணமறிஞ்சுதான் கொம்பைப் படைக்கவில்லை
- நாலு கல்லு கிடைக்கும் வரை நாய்களோடு பேச்சுவார்த்தை நடத்துபவன் தான் ராஜதந்திரி
- ஊருக்கே குறி சொன்ன பல்லி , கழனிபானையில விழுந்து சாவுமாம்
- ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம்
