பெருவெள்ளத்தில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை

என்ன செய்தார் சைதை துரைசாமி – 449

இயற்கை நிகழ்த்திய பேரழிவுதான் 2015 சென்னை வெள்ளம் என்பதை மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மிகத்தெளிவாகப் பேசி புரியவைத்தார் மேயர் சைதை துரைசாமி.

சென்னை மாமன்றக் கூட்டத்தில் பெருமழை பாதிப்புக்குப் பிறகு மேற்கொண்ட சுகாதார நடவடிக்கை குறித்துப் பேசினார். அப்போது அவர், ‘’மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காக்கவும், நோய்தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா அரை கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்வதற்கு 20 குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மழை வெள்ளத்தால் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இழந்த பள்ளி மாணாக்கர்  நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஒரு ஜோடி சீருடை வழங்கப்பட்டன. மகளிர் சுகாதாரம் பேணும் வகையில், நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மகளிர் மற்றும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மகளிருக்கு 2,07,060 எண்ணிக்கையிலான  ‘சானிட்டரி நாப்கின்கள்’ வழங்கப்பட்டன. மேலும் முகாம்களில் தங்கியிருந்த  குழந்தைகளுக்கு டயபர்  வழங்கப்பட்டன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரத்தைப் பேணி காக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நடத்திய 9,685 மருத்துவ முகாம்களின் மூலம்  15,58,967 நபர்கள் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

09.12.2015 முதல் 21.12.2015 வரை  தினந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு தினமும் அனைத்து  துப்புரவு பணியாளர்களுக்கும்  டி.டி. தடுப்பூசி போடப்பட்டது.  துப்புரவு தொழிலாளர் அனைவருக்கும், கையுறை, கால் உறை,  மழைகோட், முகக் கவசம் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு மருத்துவ முகாம்களை  சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ஜெ. இராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் திரு. விக்ரம் கபூர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள், உணவுகள் முறையாக வழங்கப்பட்டுள்ளதை தொழிலாளர்களிடம் நேரடியாகச் சந்தித்துக் கேட்டறிந்தனர். 

தொற்று நோய் வராமல் தடுக்க வருமுன் காப்போம் என்ற வகையில், அரசின் பொது சுகாதாரத் துறையும், மாநகராட்சியும் இணைந்து ஆயிரக்கணக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.  அதன் பயனாக சென்னையில் மாநகராட்சி 10833 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி, 16.80 இலட்சம் பேர்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை என்கின்ற ஒரு புதிய சாதனை  பதிவு செய்யப்பட்டுள்ளது…’’ என்றார்.

Leave a Comment