பெரியார் ஆக்டிவ் ரகசியம்

Image

95 வயது இளைஞன்

    இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு பெரியாரிடம், தங்களைப் போல 95 வயது வரை வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இது தான்.

    ’‘எப்போதும் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையிலும் வயதுக்கும் பயணத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னால் ஒருபோதும் சும்மா இருக்க முடியாது. எனவே, சுற்றுப்பயணம் செய்தால் நன்றாக இருக்கிறது.

    சாதாரணமாக எட்டு ஒன்பது மணிக்கு தூங்குவேன். பொதுக்க்கூட்டம் இருந்தால் 11 மணி 12 மணிக்கு தூங்குவேன். எப்படியும் எட்டு மணி நேரம் தூங்கி விடுவேன்.

    முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் படிப்பேன் எழுதுவேன். ஆனால் இப்போது படிக்க கஷ்டமாக இருக்கிறது. எழுத சலிப்பாக இருக்கிறது. கஷ்டப்பட்டு சிந்திக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் ஒன்றைப் பற்றி யோசித்தால் தொடர்ச்சியாக வரும். ஆனால் இப்பொழுது நினைவாற்றல் குறைந்து வருகிறது. அதேநேரம், என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம். ஆனால் கிளர்ச்சிகளில் நான் நேரடியாக பங்கு பெற நினைக்கிறேன். நான் என்ன சொல்கிறேனோ அதை நானே முன்னின்று செய்தால் தானே நல்லது. ஒதுங்கிக் கொள்வது எனக்குப் பிடிக்காது’’ என்று கூறினார்.

    அதனால் தான் அவர் பெரியார்.

    Leave a Comment