சீமான் பேச்சு ஜெயலலிதாவுக்கு மானபங்கம்

Image

கைது செய்ய தி.மு.க. திட்டம்

இரண்டு திராவிடத் தலைவர்களுக்கு இடையே ஒரு பெண்ணை படுக்க வைத்திருக்கிறார்கள் என்று சீமான் மீண்டும் ஒரு முறை ஜெயலலிதாவை படுகேவலமாக விமர்சனம் செய்திருக்கிறார்.

மற்ற கட்சியிலிருந்து மாற்றமாக நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டு அதேபோல் நீங்களும் இப்படி பேசலாமா என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு, ‘படுத்திருந்தா படுத்திருக்காங்கன்னுதானே சொல்ல முடியும்?’’ என்று பேசியிருக்கிறார்.

இந்த விஷயத்துக்கு எடப்பாடி பழனிசாமியோ, எல்லாவற்றுக்கும் வாய் திறக்கும் ஜெயக்குமாரோ அமைதி காப்பதைக் கண்டு அ.தி.முக.வினர் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவை அம்மா என்பது தவிர வேறு சொல்லில் பேசாமல் இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் அந்த பொம்பளை என்று பேசுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கத் துடிக்கும் கே.சி.பழனிசாமி, ‘’சீமானுடைய கருத்து புறந்தள்ளி சாதாரணமாக கடந்து செல்லக்கூடியது அல்ல. ஜெயலலிதா அம்மா குறித்து சீமான் பேசியது மிகவும் ஆட்சேபகமான தமிழகத்தில் இருக்கும் பெண்களை அவமானப்படுத்துகிற, மானபங்கப்படுத்துகிற அளவிலான கருத்துக்கள்.

தமிழகத்தில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யப்படுகிற பகுதிகளில் ஆண் பெண் பேதம் இன்றி ஒரே இடத்தில் பலர் நல்லடக்கம் செய்யப்படுகிறார்கள். இது தமிழகத்தில் தொன்றுதொட்டு இருக்கிற நடைமுறை.

சீமான் சொன்னபடி ஒரு ஆண் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிற பகுதியில் ஒரு பெண் அடக்கம் செய்யப்படுகிற பொழுது அவர் சொன்ன கூற்றை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? எனவே பெண்களை இழிவுபடுத்தியதற்கான கடுமையான சட்டங்களை பதிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது போன்ற் ஜெயலலிதா அபிமானிகளின் புகார்களை வாங்கி சீமானை கைது செய்வதற்கு ஸ்டாலின் அரசு திட்டமிடுவதாகத் தெரிகிறது. அப்படியொரு நிலை ஏற்பட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எடப்பாடி பழனிசாமியாலும் பா.ஜ.க.வாலும் முடியாது என்று நினைக்கிறார்கள்.

என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Leave a Comment