சென்னையில் நடமாடும் மருத்துவக்குழு அறிமுகம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 450

வரலாறு காணாத பெருவெள்ளப் பாதிப்பில் இருந்து சென்னை மக்களைப் பாதுகாப்பதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பல ஏற்பாடுகளை முன்னின்று செய்தார் மேயர் சைதை துரைசாமி.

இதற்காக நியமிக்கப்பட்ட நடமாடும் மருத்துவக்குழு குறித்து உரையில் பேசினார். இது குறித்து மேயர் சைதை துரைசாமி, ‘’சென்னை பெருமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க நடமாடும் மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டன. 

தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு கண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. வயிற்றுப் போக்கு நோயினைக் கட்டுப்படுத்தும் விதமாக 12000 உப்பு நீர் கரைசல் பாக்கெட்டுகள் முகாம்களில் வழங்கப்பட்டுள்ளன.  கழிவுநீர் மற்றும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீர்த்த சுண்ணாம்பு,  பிளீச்சிங் பவுடர் மற்றும் லைசால் தெளிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படும் பணி தொடர்ந்து நடைபெற்று  வருகிறது.  இது தவிர குளோரின் தேவையான அளவு இல்லாத இடங்கள்,  கழிவுநீர் தேங்கும் இடங்களில் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து மக்களும் நோய் எதிர்ப்பு சக்தி  பெறும் விதமாக காய்ச்சல் இல்லாதவர்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், நிலவேம்புக் குடிநீர், பப்பாளி  இலைச்சாறு வழங்கப்பட்டன.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின்  ரத்தத்தில் உள்ள  ரத்த தட்டணுக்கள் விரைவாக  அதிகரிக்கும் விதமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதற்கும் நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு  சென்னை மாநகராட்சியில் 252 அம்மா உணவகங்கள்,  140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்  மருத்துவ முகாம்களில்  வழங்கப்பட்டன.   இந்த  மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு   நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த தட்டணுக்கள் அதிகரித்தது. மருத்துவ விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் ஆட்டோவில் தொற்று நோய் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது..’’ என்று விளக்கம் கொடுத்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment