ஞானகுரு பதில்கள்
கேள்வி : துன்பங்கள் நம்மை வலுப்படுத்துமா அல்லது வாரிவிடுமா..?
- டி.சங்கர நாராயணன், முத்தால் நகர்.
ஞானகுரு :
டூ வீலரில் பயணம் செய்யும்போது வழுக்கிவிழுந்து காலை உடைத்துக்கொள்கிறார் ஒருவர். டூ வீலர் ஓட்டுவது இனி சரிப்படாது என்று நினைத்து ஆட்டோவில் போகிறவர்கள் இருக்கிறார்கள். அதேநேரம், என்ன காரணத்தினால் வழுக்கிவிழ நேர்ந்தது என்பதை கண்டறிந்து, மீண்டும் வழுக்கி விழாமல் பயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். துன்பத்தில் கிடைக்கும் பாடத்தை நீங்கள் எப்படி படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அது வலுப்படுத்தும் அல்லது வாரிவிடும்.
கேள்வி : ஞானகுருவுக்கு அரசியல் பலம் அதிகமா.. ஆன்மிக பலம் அதிகமா..?
- கே.பாண்டியராஜன், என்.ஜி.ஓ. காலனி.
ஞானகுரு :
இவற்றை அளந்து பார்ப்பதற்கான நியாயத் தராசு என்னிடம் இல்லை. அரசியல், ஆன்மிகம் எனும் பெயரில் நடக்கும் பொய், பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவதுவதும், இயற்கை வழியை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும் மட்டுமே ஞானகுருவின் பலம்.
