• Home
  • அரசியல்
  • எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறாரா அல்லது ஏமாறுகிறாரா..?

எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறாரா அல்லது ஏமாறுகிறாரா..?

Image

சதவீத சர்ச்சை

எடப்பாடி பழனிசாமி எல்லா கூட்டத்திலும் தி.மு.க.வை பொளந்து கட்டுகிறார். ‘’கருணாநிதி குடும்பத்தில் ஒரு ஆண் பிள்ளை பிறந்துவிட்டால், அவர்கள் தான் இந்த தமிழ்நாட்டை ஆட்சி செய்யணுமா? இது என்ன மன்னர் பரம்பரையா?’’ என்றெல்லாம் பேசிவிட்டு புள்ளிவிபரம் காட்டுகிறேன் என்று அவர் காட்டிய கணக்கு பெரும் சர்ச்சையாகியுள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – 33.52% வாக்குகளும் அதிமுக – 19.39% வாக்குகளும் பெற்றன. ஆனால், நடந்துமுடிந்த 2024 தேர்தலில் திமுக – 26.93% வாக்குகளே பெற்றன. ஆனால், அதிமுக – 20.46% வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது திமுகவின் வாக்குகள் 7% சதவீதம் குறைந்துள்ளது என்றும் அதிமுகவின் வாக்குகள் 1% உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரமே பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அதாவது கூட்டணியில் இல்லாமல் தி.மு.க. தனித்துப் போட்டியிட்ட இடங்கள் மட்டும் கணக்கு எடுத்திருக்கிறார். அதன்படீ 2019 நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகள் அஇஅதிமுக போட்டியிட்டு 19.39% வாக்குகள் வாங்கியது… ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 34 தொகுதியில் போட்டியிட்டு 20.50% வாககுகள் வாங்கி உள்ளது.. 2019 தேர்தலை விட 2024ல் 14 தொகுதிகள் அதிகமாக போட்டியிட்டும் 1% வாக்கு அதிகமாக வாங்கியிருக்கிறது.

அதேநேரம் 21 தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு 27 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. அதேநேரம், கடந்த தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் நின்ற விடுதலை சிறுத்தைகள், பாரிவேந்தர் போன்று யாரும் இந்த முறை தி.மு.க. சின்னத்தில் நிற்கவில்லை. அதனாலே தி.மு.க. வாக்கு சதவீதம் குறைந்தது போல் தெரிகிறது.

அந்த விவகாரமே வேண்டாம். அ.தி.மு.க.வுக்கு 2 கோடி உறுப்பினர்கள் என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கடந்த தேர்தலில் 60 லட்சம் வாக்குகளே கிடைத்துள்ளது. அப்படியென்றால் மிச்சமுள்ள வாக்குகள் எங்கே போச்சு? தப்புத்தப்பா கணக்கு சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறாரா அல்லது எடப்பாடியை இப்படி கணக்குகள் போட்டுக் கொடுத்து ஏமாற்றி வருகிறார்களா என்பதே கேள்வி.

Leave a Comment