சிறுநீரகத்திற்கு இந்துப்பு நல்லது என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இது உண்மைதானா..?
இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பே இந்து உப்பு என்றும் ஹிந்துஸ்தான் உப்பு என்றும் சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் himalayan rock salt என்று சொல்லப்படும் இந்த உப்பில் உடலுக்கு தேவையான 80 மினரல்கள் உள்ளன. சிறுநீரக செயல்பாடுகள் சரியாவது மட்டுமின்றி தைராய்டு நோய்க்கும் இது மிகவும் நல்லது. இந்துப்பினால் வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை, வாய் புண் ஆகியவை சரியாகும்.
நீண்ட நாட்களாக வயிற்றில் அல்சரால் அவதிப்படுபவர்கள் கடல் உப்புக்குப் பதிலாக இந்துப்பு சேர்த்துவந்தால் அல்சர் குணமாகும். கடலுப்பு ஆரம்பத்தில் உவர்ப்பாகவும் பின்னர் இனிப்பு சுவைக்கும் மாறும். ஆனால், இது இனிப்பாக மாறாது. ஆண்மைக்கு இந்துப்பு நல்லது. கொஞ்சம் உஷ்ணத்தன்மை கொண்டது என்பதால் மனதை சுறுசுறுப்பாக்கக்கூடியது. அதேநேரம், இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது இல்லை. வாதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகலாம் என்பதால் அவ்வப்போது மட்டும் பயன்படுத்துங்கள்.