இதயம் தொடும் குட்டிக் கவிதைகள்

Image

கவித்துவம்

சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்

ஆடை

முழு நிர்வாணமான

ஆணின்

ஒரு முழ துணியையும்

ஆடை என்கிறார்கள்.

முழுதாய் உடுத்தியிருக்கும்

பெண்ணின் ஆடை

ஒரு அங்குலம் விலகினாலும்

ஆபாசம் என்கிறார்கள்.

  • M.பாஸ்கர்

நீ யார்?

முதன்மையாக இதைத்

தெரிந்துகொள்.

நீ வாழ்க்கை முழுவதும்

தேடிக் கொண்டிருக்கும்

காதலுக்குரிய மனிதன்

வேறு யாருமில்லை.

அது நீதான்!

இந்த உண்மையைக்

கெட்டியாகப் பிடித்துக்கொள்.

வேறு எதைப்பற்றியும் கவலையோ,

பயமோ கொள்ளாதே!”

  • ரூமி

Leave a Comment