நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்

கவித்துவம்

சின்ன சின்ன வார்த்தைகளால் நெய்யப்படும் கவிதை எத்தனையோ மனிதர்களின் உயிரை உரசிவிடுகிறது. ஒரு கவிதை சிலிர்ப்பூட்டுகிறது. ஒரு கவிதை அழ வைக்கிறது. ஒரு கவிதை சிந்திக்க வைக்கிறது. நெஞ்சைத் தொட்டுச் செல்லும் குட்டிக் குட்டி கவிதைகளை படித்துப் பாருங்கள். இதயம் இனிக்கும்.

முடிவு

எடுக்க தயங்கி,

நீங்கள் தவிர்க்கும் முடிவை நோக்கியே

உங்களை நகர்த்தி,

கையறுநிலையில் நிறுத்துவதே

இந்த சதுரங்கத்தின் அடிப்படை ஆட்ட விதி.

  •  அரூபி

கடவுள்

காணிக்கை செலுத்துபவன்

சுயநலவாதியாகவும்,

தானம் செய்கிறவன்

கடவுளாகவும் தெரிகிறான்.

ஒரு பிச்சைக்காரனின் பார்வையில்.

  • அதிரூபன்

Leave a Comment