கவித்துவம்
சின்ன சின்ன வார்த்தைகளால் நெய்யப்படும் கவிதை எத்தனையோ மனிதர்களின் உயிரை உரசிவிடுகிறது. ஒரு கவிதை சிலிர்ப்பூட்டுகிறது. ஒரு கவிதை அழ வைக்கிறது. ஒரு கவிதை சிந்திக்க வைக்கிறது. நெஞ்சைத் தொட்டுச் செல்லும் குட்டிக் குட்டி கவிதைகளை படித்துப் பாருங்கள். இதயம் இனிக்கும்.
சுதந்திரம்
எப்போது வேண்டுமானாலும்
உன்னைக் கைவிட்டு
ஓடிப்போவதற்கான
சுதந்திரத்தை
எப்போதும் நீ எனக்களித்தால்
காலம் முழுக்க
உன்னோடு இருக்கிறேன்.
- போகன் சங்கர்
எல்லாம் ஒன்று
வாழ்க்கை என்பது
ஒரே கதைதான்.
ஆனால், ஒவ்வொருவரும்
ஒவ்வொரு
தலைப்பை இடுகிறார்கள்.
- கவிக்கோ அப்துல் ரகுமான்
