கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
அன்பும் அறிவும்
அன்பு பொறாமை கொள்ளாது
அன்பு சந்தேகப்படாது
அன்பு பயன் யோசிக்காது
அன்பு காயப்படுமே தவிர காயப்படுத்தாது
அன்பு யார் பெரிது என்று சிந்திக்காது
அன்பு வேலை முடிந்தால் விட்டு விலகாது
ஏனெனில்
உண்மையான அன்புக்கு
ஆறாம் அறிவு கிடையாது.
- பாலாஜி
மனசு
மனம் ஒரு மலை.
குடைந்துகொண்டே இரு.
புதையல் கிடைக்கலாம்
புத்தன் கிடைக்கலாம்
நீயும் கிடைக்கலாம்.
– பாத்திமா மவுனா ரூமி












