நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்

Image

கவித்துவம்

சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்

நிஜம்

யார் கையால் நீரூற்றினாலும்

உறிஞ்சிக் கொள்கிறது

வேர்

எந்த மண்ணில் நட்டாலும்

இனிக்கவே செய்கிறது

கரும்பு.

– யுகபாரதி

சமம்

வாழ்த்து செய்தியும்,

இரங்கல் செய்தியும்

சுமந்துக் கொண்டு விழுகிறது

பூக்கள்

  • தனிதன்

மாற்றம்

புத்தகம் நமக்குள் 

எத்தனையோ மாற்றங்களை தந்து விட்டு,

அமைதியாகி விடுகிறது…புத்தனாய்!

  • மு.முபாரக்

Leave a Comment