மனிதநேயர் சைதை துரைசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

Image

எம்.ஜி.ஆரின் ரசிகனாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று மக்கள் தொண்டராக, மாணவர் வழிகாட்டியாக, மனிதநேயராகவும் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகவும் வாழ்ந்துவரும் பெருநகர சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு பிறந்த நாள் இன்று.

அவரது வாழ்க்கை வரலாறு நீண்ட பெருங்கடல் என்றாலும் சில துளிகளை மட்டும் இன்று நினைவுபடுத்துகிறோம்.

  • பள்ளி மாணவராக இருந்தபோது புரட்சித்தலைவரின் திரைப்படங்களால் கவரப்பட்டு பேனா நண்பர்கள் வட்டம் தொடங்கி புரட்சித்தலைவரின் புகழ் பரப்பியவர் சைதை துரைசாமி.
  • புரட்சித்தலைவருக்கும், மன்றங்களுக்கும், ரசிகர்களுக்கும் தி.மு.க.வில் நெருக்கடி ஏற்பட்ட காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு தாமரைப்பூ கொடி ஏற்றி புரட்சி செய்தவர்களில் ஒருவர்.
  • ரசிகர் மன்றத்தினர் 1972ம் ஆண்டு அக்டோபர் 1 அன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மனதில் புதிய கட்சிக்கு விதை தூவினார் சைதை துரைசாமி. சைதையார் பேசியதை உறுதிபடுத்திக்கொண்ட புரட்சித்தலைவர் 8ம் தேதி திருக்கழுக்குன்றம், சென்னை பொதுக்கூட்டங்களில் கணக்கு கேட்டார்.
  • இதையடுத்தே 10ம் தேதி கட்சியிலிருந்து நீக்கம், 17ம் தேதி அண்ணா தி.மு.க. உதயம் போன்ற வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறின. அ.தி.மு.க. வரலாற்றில் சைதை துரைசாமிக்கு முக்கியப் பங்கு உண்டு.
  • புரட்சித்தலைவரை அவமதிப்பு செய்த அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு பொதுமேடையில் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து, அதற்காக அடித்து மிதித்து, உதைத்து உயிர் போகும் அளவுக்கு கொடுமைக்கும் ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைக்கும் ஆளானவர் சைதை துரைசாமி.
  • செல்லப்பிள்ளை போன்று தன் அருகில் வைத்து சைதை துரைசாமியை பாதுகாத்தவர் புரட்சித்தலைவர். அண்ணா தி.மு.க.வின் பகத்சிங், அண்ணா தி.மு.க.வின் முதல் தியாகி என்றெல்லாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்டவர் சைதை துரைசாமி.
  • எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்ட போதும் மாற்றுக் கட்சியில் சேராமல் சொந்த நிதியில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வி மையத்தை உருவாக்கி மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றியவர்.  
  • புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபொழுது, எந்த சலுகையையும் பெறாமல் சொந்த செலவில் பணியாற்றினார். அவரைப் போலவே சைதை துரைசாமியும் சென்னைக்கு மேயர் ஆனதும் வாகனம், ஓட்டுனர், பெட்ரோல், வீட்டிற்கான தொலைபேசி, பணியாளர்கள் என மேயருக்குண்டான எவ்வித சலுகைகளும் பெறவில்லை. அரசு முறை பயணமாக அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு பயணத்திற்கும் சொந்த செலவிலேயே பயணித்தவர்.
  • மேயராகப் பணியாற்றிய ஐந்தாண்டு காலமும் எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாத ஒரே மேயர் என்ற பெருமையுடன் இன்றும் மக்கள் சேவையிலும் மாணவர் சேவையிலும் தீவிரமாக இயங்கி வருகிறார் சைதை துரைசாமி.

மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்த அங்கீகாரமும் பாராட்டும் இதுவரை சைதை துரைசாமிக்கு வழங்கப்பட்டதில்லை என்றாலும், அவற்றைக் கண்டுகொள்ளாமல் சேவையின் பாதையில் வெற்றி நடை போட்டு வருகிறார்.

Leave a Comment