பயணத்தில் உள்ளது மகிழ்ச்சி

கடலில் அலைகள் இல்லாத நாள் கிடையாது. அலைகளுக்குப் பயந்து எந்த கப்பலும் கரையிலே நிற்பதில்லை. கடலுக்குள் பயணம் தொடர்வதுதான் அதன் இலக்கு. வாழ்க்கையும் அப்படித்தான். சவால்கள், இடையூறுகள் இருந்தாலும் மனம் தளராமல் தடுமாறாமல் முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.  

மகிழ்ச்சி என்பது பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை அல்ல. பிரச்சினைகளுக்கு நடுவிலும் மன அமைதியை இழக்காமல் வாழ்க்கையும் நடத்தும் பயணம். இந்த வாழ்க்கைப் பயணத்தை ஒவ்வொரு நாள் கடப்பதும் வெற்றி என்று மகிழுங்கள்.

Leave a Comment