ஜோ… ஜோ.. ஜோக்ஸ்
மனைவி : என்னங்க, என்னை இந்த வாரம் தினம் தினம் ஷாப்பிங் கூட்டிட்டுப் போறீங்களா..?
கணவன் : அதனால என்ன டார்லிங். நிச்சயம் கூட்டிட்டுப் போறேன். ஆனா, அடுத்த மாதம் முழுக்க நீ என் கூட கோயிலுக்கு வரணும்..
மனைவி : எதுக்குங்க..?
கணவன் : பிச்சை எடுக்கத்தான்.
…………………
டாக்டர் : நான் எவ்வளவோ கஷ்டப்பட்டும் பேஷண்டை காப்பாத்த முடியலைங்க…
நர்ஸ் : டாக்டர், நீங்க இப்ப போஸ்ட்மார்டம்தான் செஞ்சிட்டு வர்றீங்க…
………………………………..
காதலி : நீங்க உங்க அப்பாவைப் போல இருப்பீங்கன்னு சொல்றீங்களே, உங்க அப்பா என்னதான் செய்றாரு..?
காதலன் : எங்க அம்மா சொல்றதை மட்டும் செய்வாரு.
……………………
மகன் : அம்மா, எதிர் வீட்டு ஆண்ட்டி பேர் என்னம்மா..?
அம்மா : லலிதா, ஏன் கேட்குற
மகன் : அப்பாவுக்கு அதுகூட தெரியலைம்மா, டார்லிங்கின்னு கூப்புடுறார்.
…………………………….
டாக்டர் : காதுக்குள்ள பல்லி போற வரைக்கும் என்ன செஞ்சீங்க..?
அவன் : காதுக்குள்ளே போன கரப்பான் பூச்சியைப் பிடிக்கத்தான் போகுதுன்னு நினைச்சேன் டாக்டர்.