நிஜமா ,நிஜமில்லையா?
வியர்வையினால் வரும் அசெளகரியத்தைத் தடுப்பதற்கு கை அக்குளில் நிறைய பெண்கள் பவுடர் போடுவதுண்டு. அதேபோல் வியர்வைக்கு எதிராக டியோடரண்ட், சோப்பு, வாசனைத் திரவியம் பூசுபவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் என்ற ஒரு கருத்து உலவுகிறது. இந்த வேதியல் பொருட்களில் இருக்கும் பாரபின், அலுமினியம் போன்றவை மார்பகத் திசுக்களை பாதிக்கிறது என்று நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால், மார்பகப் புற்று நோய்க்கான காரணம் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறாக இருக்கின்றன.
சோப், டியோடரண்ட் போன்றவை மார்பகப் புற்று நோய்க்கு காரணம் என்பது உறுதி செய்யப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் மார்பகத்தில் கட்டி தென்படுகிறதா என்று பரிசோதனை செய்வது மட்டுமே பாதுகாப்பானது. அதோடு போதிய சத்துணவு, உடற்பயிற்சிகள் மேற்கொள்வதும் அவசியமாகிறது.