பணம், பதவி, புகழ், சொத்து ஆகியவை வாழ்க்கையை வசதியாக்கலாம். ஆனால் அவை மகிழ்ச்சியை உறுதி செய்ய முடியாது. உண்மையான மகிழ்ச்சி என்பது நம் மனம் நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ளது.
ஒருவர் மிகப்பெரிய வீட்டில் வாழ்ந்தாலும், காஸ்ட்லி காரில் பயணம் செய்தாலும் மனதில் அமைதி இல்லை என்றால், அவரிடம் இருக்கும் செல்வத்துக்கு எந்த பயனும் இல்லை. அதேநேரம் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும், மனநிறைவுடன் இருந்தால் அவர் உண்மையில் மகிழ்ச்சியானவர். இவரே உண்மையான செல்வந்தர்.
