ஹிஹிஹிஹி ஜோக்ஸ்
மன்னர் : மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?
அமைச்சர் : மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ட்டான்.
மன்னர் : நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே…!
அமைச்சர் : அதைத்தான் சொல்லிட்டான்…!
………………….
ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?
திருடன் : ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.
……………………
விமானம் ஒன்று ராக்கெட்டைப் பார்த்து கேட்டது, ’’ஹே,,,நீ எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய்’’ என்றது.
ராக்கெட் சொன்னது : போடாங்ங்ங்கொய்யா…. உனக்கும் பின்னால தீ வெச்சா தெரியும்
……………………………
மனைவி : டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”
டாக்டர் : என்னாச்சு
மனைவி : டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!”
……………………
சேல்ஸ்மேன் : எங்க கடைல துணி வாங்குனா கிழியவே கிழியாது சார்!
கஸ்டமர் : அச்சச்சோ, எனக்கு 2 மீட்டர்தான் வேணும். எப்படி கிழிச்சு குடுப்பீங்க?”