- சுலபமான பியூட்டி டிப்ஸ்
பெண்கள் எல்லோருமே அழகு என்பதே உண்மை. தங்களை அழகாக மாற்றிக்கொள்ளத் தெரிந்துவிட்டால், அவர் பேரழகியாக மாறிவிடுவார். இதற்காக ரொம்பவும் மெனக்கெடவும் வேண்டியதே இல்லை. வீட்டில் கைக்கு அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே ஒவ்வொரு பெண்ணும் பேரழகியாக மாறிவிடலாம். இயற்கை அழகை மேம்படுத்தும் எளிய வழிகளைப் பார்க்கலாம்.
நெல்லிக்காய் எண்ணெய்
நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.
கடலை மாவு
முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இதை பல நடிகைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
மஞ்சள்
இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.
குங்குமப்பூ
இந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.
ரோஸ் வாட்டர்
புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.
சந்தனம்
இந்திய கலாசாரத்தில் கடவுளின் சன்னிதானத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சந்தனம். இவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.
சீகைக்காய்
இதை முடியின் பழம் என்றும் ஆயர்வேதத்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.
இப்படி ஒவ்வொரு பொருட்களிலும் உள்ள அழகுத் தன்மையை அறிந்து பயன்படுத்தினால், நிச்சயம் எல்லா பெண்களுமே அழகாகிவிட முடியும். அழகுக்கு ஆசைப்படும் ஒவ்வொரு பெண்ணும் செய்ய வேண்டிய ஒரு அத்தியாவசிய விஷயம் என்ன தெரியுமா?
அது, மாதத்திற்கு ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்ற வாறு இறந்த செல்களை நீக்குவதுதான் சரியான முறை.
இறந்த செல்களை செயற்கையாக பணம் கொடுத்து ரசாயனக் கலப்புகளுடன் இருக்கும் அவற்றை பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அடிக்கடி உங்கள் சருமத்திற்கு இவ்வாறான செயற்கை ரசாயனம் ஊட்டப்பட்ட கலவையை தருவது உங்கள் சருமத்தின் இயல்பை மாற்றி வறண்டு சுருக்கங்கள் வர வைத்து விடும்.
க்ளென்சிங் முறைக்கு காய்ச்சாத பால் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்கள், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டுக்கள், கிளிசரின் 10 சொட்டுக்கள் இதனை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இதனை பஞ்சின் மூலம் தொட்டுக்கொண்டு அழுத்தமாக முகத்தை துடைக்கவும். இதுவே எளிமையான க்ளென்சிங் முறை.
ஸ்க்ரப்பிற்கு பழுத்த பப்பாளி பழம், அன்னாசி பழம், ஸ்டராபெரி பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெய்பசைக்காரர்களுக்கு ஸ்டராபெரி நல்லது. இதனை மிக்சியில் போட்டுக் கூழாக்கவும். தண்ணீர் விட வேண்டாம். அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைத்தூள் மற்றும் 1/4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்ட வடிவில் தேய்க்கவும். இதனால் இறந்த செல்கள் எளிதாக நீங்கும். முகம் பளபளக்கும். இதனை கைகள் கால்கள் என எல்லா இடத்திலும் தேய்க்கலாம்.
மேலே குறிப்பிட்ட மூன்று பழங்களான பப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்டராபெரி பழங்கள் இறந்த செல்களை நீக்கும் என்சைம்களை மூலமாகக் கொண்டவை. வாரம் இருமுறை இப்படி ஸ்கரப் செய்வதால் முகப்பொலிவு மேம்படும். கரும்புள்ளிகளும் மறையும். இயற்கையாகவே அழகு மின்னும்.