நிஜ மகிழ்ச்சி எது? பொய் சந்தோஷம் எது?

ஞானகுரு பதில்

கேள்வி : மகிழ்ச்சி என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன..?

  • சி.செந்தில்குமார், திண்டுக்கல்.

ஞானகுரு :

ருசியான உணவு, ஜாலியான அரட்டை, மது, பாலியல், சினிமா போன்ற கலைகள் சந்தோஷம் தரலாம். ஆனால், இவை எல்லாம் தற்காலிக மகிழ்ச்சி மட்டுமே.

உண்மையான மகிழ்ச்சியின் இலக்கணம் புரிந்தவருக்கு மட்டுமே, பொய் மகிழ்ச்சியின் வித்தியாசத்தை அறியமுடியும். 

தன்னை முக்கிய நபராக உணர்பவர் மட்டுமே மகிழ்ச்சியை அனுபவிக்கத் தகுதி பெற்றவர். தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் நாட்டுக்கும் நிறைய நன்மைகள் செய்யமுடியும் என்ற எண்ணமே நிறைய பேரின் மகிழ்ச்சியின் அடிநாதம். இந்த எண்ணம் இருப்பதாலே தலைவர்கள், உயர் அதிகாரிகள், வெற்றியாளர்கள் எல்லா நேரங்களிலும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.

அதோடு உறவுகள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்களின் அன்பு, பாசம், நெருக்கம் போன்றைவயும் மகிழ்ச்சிக்கு ஆணி வேராகத் திகழ்கிறது. நிறைய நண்பர்கள், நிறைய உறவுகளுக்கு பிடித்தமானவராக இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

அதோடு, புதுப்புது விஷயங்கள் கற்றுக்கொள்வது நிறைய பேருக்கு மகிழ்ச்சி தருகிறது. மகிழ்ச்சி என்பது கொண்டாட்டமாக இருப்பதில்லை. ஆனால், அதீத திருப்தியாக இருக்கும். கடந்த காலம் பற்றிய கவலை இல்லாமல், எதிர்காலம் பற்றிய அச்சம் இல்லாமல் இன்றைய வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதே மகிழ்ச்சி. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment